பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு.!?

பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாய்க்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து,  தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சல்மான்கானின்  வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர்  சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக லாரன்ஸ் பிஷ்னாய் ஆஜரானதை அடுத்து சல்மான் கானின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், ஒரு வழக்கின் காரணமாக கடந்த 2018 – ஆம் ஆண்டு சல்மான் கான்  நீதிமன்றத்திற்கு வந்த போது, நீதிமன்றத்திற்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னாய் நாங்கள் ” ஜோத்பூரில் சல்மான் கானைக் கொல்வோம்” என்று கூறியுள்ளார். இதனால் தான் சல்மான் கான் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment