29 C
Chennai
Wednesday, June 7, 2023

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு...

ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் அதிர்ச்சி..! அதிகாரிகள் தீவிர விசாரணை…!

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் ...

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு...

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.!!

சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையும், கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது “ஃபர்ஹானா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை திரையிட கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரத்து செய்யப்படுவதாக திருவாரூரில் ஒரு திரையரங்கு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஃபர்ஹானா படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதனையடுத்து, தற்போது  சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.