இறந்த பாஜக எம்எல்ஏ சட்டையில் இருந்து தற்கொலைக் குறிப்பை மீட்ட போலீசார்.!

இறந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்

By murugan | Published: Jul 13, 2020 02:55 PM

இறந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 454 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய்  ஒரு கடைக்கு வெளியே  தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த உள்ளூர் வாசிகள் போலீருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் உடலை கைப்பற்றி மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்து அவரது வீடு  ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த  எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய்  பாக்கெட்டில் தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்தவரின் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு இரண்டு நபர்கள் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று போலீசார் தெரிவித்தனர்.

குடும்பத்தை சார்ந்த ஒருவர் கூறுகையில், அதிகாலை 1 மணியளவில் சிலர் வீட்டிற்கு வந்து அவரை அழைத்து சென்றதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார். மேலும், எம்.எல்.ஏ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று  எம்.எல்.ஏ. மருமகன் கிரிஷ் சந்திர ரே கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc