உள்ளாட்சியின் போது உயிர் துறந்த காவல்துறையினருக்கு முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி..

  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது.
  • இந்த  உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் திரு. ஜான்சன் வயது 42 ஈடுபட்டிருந்தார். பணியின் போதே அவருக்குத்  திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். எனினும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிர் தியாகம் செய்தார். இதே போல், உள்ளாட்சி தேர்தல் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  முருகதாஸ் மற்றும்  அறிவுடை நம்பி ஆகியோரும் தங்களது உயிரை பணியின் போது தியாகம் செய்தனர். இந்த உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த  மூன்று காவலர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகிய 3 காவலர்களின்  குடுமபத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவரண  நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Kaliraj