32.2 C
Chennai
Friday, June 2, 2023

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசு தான் காரணம்… ராகுல் காந்தி குற்றச்சாட்டு.!

பதக்கங்களை வாங்கித்தந்த மகள்களின் நிலைக்கு, பிரதமர் மோடி அரசு...

ஐந்து முக்கிய திட்டங்கள்! இந்தெந்த தேதிகளில் அமல்.. கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட்...

ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி…வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில்...

எடப்பாடி பழனிசாமி மீது காவல் நிலையத்தில் புகார்!

இபிஎஸ், முருகன் உள்ளிட்ட 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக இபிஎஸ் உள்ளிட்ட 30 பேர் மீது சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். சேலத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், இபிஎஸ், முருகன் உள்ளிட்ட 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எடப்பாடியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் புகழேந்தி கலந்துகொண்டு திரும்பியபோது தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.