உயிரை பறித்த விஷ சாராயம் – முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் முதல்வர் ஆலோசனை…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர்  சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு  உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் பொன்முடி, வேலு, செஞ்சி மஸ்தான், டிஜிபி சைலேந்திரபாபு, விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆட்சியர்கள் எஸ்.பி.க்கள் ஆகியோருடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.