தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி – கனிமொழி

மகாகவி நாளான இன்று, அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வோம்.

இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து எம்.பி.கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி. சுதந்திரம், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை இயக்கிய மகாகவி பாரதியாரின் நினைவுநாள் இன்று. மகாகவி நாளான இன்று, அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.