காஷ்மீர்  விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

நீண்ட நாளாக பதற்ற நிலையில் இருந்த காஷ்மீர்  தொடர்பான விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.காஷ்மீர் தொடர்பான மசோதா ஒன்றை தாக்கல் செய்து அதை விளக்கினார்.

அவரது விளக்கத்தில் ,காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ,இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுகிறது  என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஜம்மு-காஷ்மீர்  விவகாரம் தொடர்பாக  மக்களவையில் விவாதம் நடக்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.