பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு , விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை  – பிரியங்கா காந்தி

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே விவசாயிகள் 90 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராடி வரும் விவசாயிகளில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.போராடி வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் குறைக்கப்பட்டது, அவர்கள் தாக்கப்பட்டனர்.அவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் டெல்லியின் எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாற்றப்பட்டன.எங்கள் எல்லைகளை பாதுகாக்க தங்கள் மகன்களை அனுப்பும் விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.”பிரதமர் விவசாயிகளை கேலி செய்தார், அவர்களை ‘ஆண்டோலன் ஜிவி’ என்று அழைத்தார். விவசாய அமைப்பின்  தலைவர் ராகேஷ் டிக்கைட் அழும்போது, ​​அது வேடிக்கையானது என்று பிரதமர் கருதுகிறார்” எனக் கூறினார் பிரியங்கா.