இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்…!

இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அந்தஸ்தை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’உங்கள் அனைவருக்கும் இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள். இந்தியை ஒரு திறமையான மொழியாக மாற்றுவதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். உங்கள் அனைத்து முயற்சியின் விளைவாகவே இந்தி தொடர்ந்து தனது வலுவான அடையாளத்தை உலக அரங்கில் உருவாக்கி வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.