பாஜக வேட்பாளரை நினைவில் வைக்க வேண்டாம்.! – பிரதமர் மோடியின் பிரச்சார பேச்சு.!

பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். – இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள்  டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதற்காக பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டியில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், வாக்களிக்கும் போது பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம்.

தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். தாமரை சின்னம் வந்துவிட்டால் பாஜகவும், மோடியும் உங்களிடையே நேரில் வந்துவிட்டனர் என்று அர்த்தம் என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறுவது காங்கிரஸின் டிரிக். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது பாஜக தான். இமாச்சல பிரதேச வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் முன்னுரிமை கொடுத்தது கிடையாது. எனது தனது பிரச்சார கூட்டத்தில் பேசினார் பிரதமர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment