தமிழகத்தின் நாக நதி குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!

தமிழகத்தின் நாக நதி குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!

கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.

பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதாவது, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ‘நாக நதி’ பல ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மக்களை ஒன்றிணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். இவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நாக நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால், நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என தெரிவித்த பிரதமர், தமிழக சகோதரிகளின் முயற்சிகளை போன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் ‘உலக நதி தினம்’. குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது என்றும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube