#BREAKING: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்..!

டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்ற்றுள்ளனர். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் ரத்தன் டாடா, மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரி, மாநிலங்களவை சபை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பல்வேறு மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். புதிய கட்டிடத்திற்க்கான ஒப்பந்தம் டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அருகே முக்கோண வடிவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. கலைநயம், எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைகிறது. கூட்டுக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது.

author avatar
murugan