கொவைட்-19 விவகாரம்… இது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பாரத பிரதமர் வானொலியில் உரை…

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக உலகம் முழுவதும்  பல  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைய்யில் இந்த கொடிய கொவைட்-19 இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்,  இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.அதில், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக  கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்து  பகுதிகளும்  வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொவைட்-19  முன்னெச்சரிக்கை தொடர்பாக பாரத பிரதமர் மோடி  இன்று இரவு நாட்டு மக்களுக்கு வானொலியில்  இன்று இரவு 8மணிக்கு உரையாற்றுகிறார்.  இதில், கொவைட்-19 குறித்து மக்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்தும், தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தற்போதைய அவசியம்   குறித்தும் அவர் எடுத்துக் கூறுவார் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி இந்நோய்  பரவாமல் தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.

author avatar
Kaliraj