வீர சாவர்க்கர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

By

Veera Savarkar Airport

அந்தமானில் ரூ.707 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

அந்தமானில் தலைநகரமான போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

AndamanandNicobar
AndamanandNicobar [FileImage]

சுமார் 707 கோடி ரூபாய் கட்டுமான செலவில், கடலையும் இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் ‘சிப்பி’ வடிவில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

AndamanandNicobar
AndamanandNicobar [FileImage]

மேலும், இந்த புதிய முனையம் 4000 சுற்றுலா பயணிகளை கையாளும் திறன் கொண்டது என்றும், புதிய முனையம் இந்த எண்ணிக்கையை 11,000 ஆக உயர்த்தி 10 விமானங்களை நிறுத்த முடியும்.

AndamanandNicobar
AndamanandNicobar [FileImage]

இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, ஊழலை ஊக்குவிக்க பெங்களூருவில் கூடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கிடையில், இன்று டெல்லியில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டமானது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.