பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை

Default Image

பிரதமர் நரேந்திர மோடி இன்று  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை  நடத்தினார்.

பாராளுமன்றத் தேர்தலில்  இலங்கை மக்கள் முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி  மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக புதிய பதவிக்கு பதவியேற்றார்.இதனிடையே இந்தியா மற்றும் இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற நிலையில்  இந்திய  பிரதமர் மோடி பேசுகையில் , ராஜபக்சே அரசாங்கத்தின் கொள்கைகளின் ஆதரவுடன் இலங்கையில் ஆளும் கட்சியின் பெரிய தேர்தல் வெற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்புக்கு உதவும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ராஜபக்சேவின் வெற்றிக்கு பின்னர் இந்தியா-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஒரு வாய்ப்பு வந்துவிட்டது. இரு நாடுகளின் மக்கள் புதிய நம்பிக்கையுடனும்  ,எதிர்பார்ப்புகளுடனும் பார்க்கிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.மேலும் அவர் பேசுகையில் ,இலங்கையுடனான  உறவுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்றும் பேசினார் பிரதமர் மோடி.

ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் மற்றும் பல முக்கிய துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்  உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு நாட்டு  தலைவருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 .

Join our channel google news Youtube