PM Modi

அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பம்.. இந்தியாவில் திறமையான இளைஞர்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

By

 இந்தியா – அமெரிக்காவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு திறமையான தொழில்நுட்ப அறிவு தேவை என பிரதமர் மோடி அமெரிக்காவில்பேசியுள்ளார் . 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று நியூயார்க்கில் யோகா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை தொடந்து வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு பரம்பரிய பரிசு பொருட்கள் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி அங்கு, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி சென்றார். அங்கு பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்கா – இந்தியாவின் நிலையான பொருளாதாரத்திற்கு திறமையான தொழில்நுட்ப அறிவு தேவை என்றும், அமெரிக்காவில் உயர்தர கல்வி நிலையங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளன. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். இந்தியா – அமெரிக்காவின் நல்லுறவானது உலகளாவிய வளர்ச்சிக்கு உதவும் எனவும் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பேசியுள்ளார்.