31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

தீபாவளி பண்டிகையை கொண்டாட இந்தியா வாருங்கள்… ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு.!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாட இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக, ஜப்பான், பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்து வருகிறார். இந்த பயணங்களை முடித்து கொண்டு, ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் கலந்து கொண்டார்.

ஆஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு இருநாட்டு கிரிக்கெட் அணிகளின் போட்டி போல நன்றாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளை காண ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுதந்துள்ளேன். நீங்கள் அந்த சமயத்தில் இந்தியா வந்தால் இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டத்திலு, பங்கேற்கலாம் எனவும் கூறி ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.