விஷ வாயு தாக்கி 8 பேர் பலி.! மீப்பு குழுவினருடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

விஷ வாயு தாக்கி 8 பேர் பலி.! மீப்பு குழுவினருடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது. 

இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வீரர்கள் தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமத்தினரை மீட்டு வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க சொல்லி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube