நண்பர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினேன்.! பிரதமர் மோடி ட்வீட்.!

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளளார்.

By manikandan | Published: Jun 02, 2020 10:35 PM

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளளார். இந்த தகவலை தற்போது பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு நாட்டு தலைவர்களும், பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி, தான் நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் தொலைபேசியில் பேசியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் தொலைபேசியில் பேசுகையில், கொரோனா நடவடிக்கைகள்,ஜி-7 மாநாடு உள்ளிட்ட பலவற்றை பற்றியும் ஆலோசித்தோம் என  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Step2: Place in ads Display sections

unicc