சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. பிரமாண்ட விமானநிலையம் விரைவில் தயார்.!

By

2400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலைய பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமானநிலையத்திற்கு அன்றாடம் பயணிகளின் வரத்தும், விமானங்களின் வரத்தும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனை சரிப்படுத்த, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி செலவில் விமான நிலையத்தில் முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்திருந்த மத்திய விமான நிலைய ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், டிசம்பருக்குள் சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதலில் பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து மேம்படுத்தபட்ட முனையங்களை திறந்து வைப்பார் என கூறியுள்ளார்.