சென்னை வந்தார் பிரதமர் மோடி..!

சென்னை வந்தார் பிரதமர் மோடி..!

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. இந்திய விமான படைக்கு சொந்தமான விமானத்தில் மோடி சென்னை வந்தார்.விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சற்று நேரத்தில் பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார்.விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் , ஆளுநர் ,ஜி.கே வாசன் மற்றும் பிரேமலதா ஆகியோர் வரவேற்றனர்.