பிளஸ் 2 தேர்வு ரத்து…! கேப்டன் விஜயகாந்த் வரவேற்பு…!

  • தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து.
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.

சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், நேற்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இவர்கள் அனைவரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  சமர்பித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா காலகட்டத்தில், மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், +2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு ரைவல்ரி போட்டி !! பஞ்சாப் – மும்பை இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…

3 mins ago

ஐபிஎல் 2024: போராடிய குஜராத்… இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்ற டெல்லி அணி..!

ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

9 hours ago

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் குஜராத் அணி ..!! தாக்குப்புடிக்குமா டெல்லி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…

12 hours ago

நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…

12 hours ago

ஓய்ந்தது பிரச்சாரம்…சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்…

LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…

12 hours ago

பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…

13 hours ago