பிளஸ் 1 மதிப்பெண் சான்று – செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

பிளஸ் 1 மதிப்பெண் சான்று – செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30 முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

மேலும், 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் 5 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube