இன்ப செய்தி..! இனி GST கிடையாது..!

இன்ப செய்தி..! இனி GST கிடையாது..!

இன்ப செய்தி..! இனி GST கிடையாது..!

வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைக்கு GST கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜுலை மாதம் நாடு முழுவதும் GST கொண்டு வரப்பட்டது. இதனால் மிகவும் பாதிக்கபட்ட துறையில் ஒன்று வங்கிகள். வங்கிகள் தனது வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருக்கும் இருப்பு தொகையிலிருந்து வரும் லாபத்தை கொண்டு பல இலவச சேவையை தனது பயனர்களுக்கு தந்தனர்.

உதாரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு செக் புக், பாஸ் புக், ஏடிஎம் கார்டு, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மிலிருந்து மாதம் 5 முறையும், பிற வங்கியிலிருந்து 3 முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதித்தது வங்கிகள்.

Image result for GSTஆனால் இந்த லாபத்தை பார்த்த மத்திய அரசு பிற கட்டண சேவையுடன் சேர்த்து கணக்கிட்டு GST வசூலிக்கும் படி மத்திய அரசு வங்கிகளுக்கு ஆணை வெளியிட்டது. இதனால் வங்கிகள் பயனர்களுக்கு தரும் இலவச சேவைகள் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனால் தான் ஏடிஎம்மில் 1 முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தற்பொழுது மத்திய மறைமுக வரிகள் ஆணையம் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அதில் வங்கிகள் இனி பயனர்களுக்கு தரும் இலவச சேவைக்கு GST கிடையாது எனவும், ஏடிஎம் இயந்திரங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்ய தேவையில்லை எனவும், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகள் என அதிரடியாய் அறிவித்துள்ளது.

இதனால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இருக்கும் கட்டுபாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *