தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - த்ரிஷா வேண்டுகோள்

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் என்று த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்தியாவில்

By venu | Published: Mar 26, 2020 03:49 PM

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் என்று த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு இடையில் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷா  வீடியோ  வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். கொரோனாவை  தடுக்க 21 நாட்கள் வீட்டில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருப்பது லேசானது இல்லை என்பது எனக்கு தெரியும். நம்மை பாதுகாத்துக்கொள்ள இதை செய்துதான் ஆக வேண்டும். எனவே தயவுசெய்து வீட்டில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc