29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா…?

கருப்பு கவுனியில் உள்ள  மருத்துவ குணங்கள்.  கருப்பு கவுனி என்பது...

Playoffs CSK vs GT: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு.!

ஐபிஎல்-இன் முதல் தகுதிச்சுற்று CSK vs GT போட்டியில் டாஸ் வென்ற  குஜராத் அணி முதலில்  பவுலிங் தேர்வு.

ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காணுகின்றன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்பில் முழு பலத்துடன் இன்று களமிறங்குகின்றன.

இன்றைய போட்டியில் வென்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பதால் வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் என்பதால் இரு அணியிலும் உள்ள ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி ஸ்பின்னர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்றைய போட்டியில் சென்னை அணி வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழையுமா அல்லது குஜராத் அணி செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை இன்று தோல்வியுறும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில்  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.