BS-6 தரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110H-Gear-இன் விலை 59,802 மட்டுமே.!

BS-6 தரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110H-Gear-இன் விலை 59,802 மட்டுமே.!

பட்ஜெட் மாடல் பைக்குக்குகளில் நல்ல மைலேஜ் தரும் மாடலாக வாகன ஓட்டிகளின் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது பஜாஜ் பிளாட்டினா . அதன் விலை, என்ஜின் விவரம் மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.!

எஞ்சின் விவரம் : பஜாஜ் பிளாட்டினாவில் பிஎஸ் 6 தரத்தில் 115cc எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,000 rpm, 8.4 pHp திறனையும், 5,000 rpm-இல் 9.81 nm  டார்க்க திறனையும் வெளிபடுத்துகிறது.

பிளாட்டினா 110 எச்-கியரின் சிறப்பம்சங்கள் : இந்த மாடலானது,  முந்தைய மாடலை போலவே 5-speed கியர் பாக்ஸ் அமைப்பை பெற்றுள்ளது. ஆனால், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் 100-110 சிசி பைக்கின் எஞ்சின் போன்று இது ஆல்-டவுன் கியர்-ஷிப்ட் வடிவத்தையும் பெற்றுள்ளது. ஐந்தாவது கியரால் பைக்கின் செயல்திறனையும், மைலேஜையும் அதிகரிக்கிறது.

இந்த மாடல், 84 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும், பஜாஜின் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் வசதியுடன் 240mm டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் முன்புறமானது 135 மிமீ மற்றும் பின்புறமானது 110 மிமீ இன்-கிளாஸ் சஸ்பென்ஷன்களையும்  கொண்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 110 H-Gear-இன் விலை 59,802 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையே ஆகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube