அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 3 மடங்கு உயரும்!

அரசும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது. இந்நிலையில், அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க முயலாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றால் முகக் கவசங்கள், கையுறைகள், ஆன்லைன் வணிகத்திற்காக பேக்கிங் கவர்கள் பயன்பாட்டால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தற்போதைய காலத்தில் அதிகரித்துள்ளதாக சர்வதேச திடகழிவு சங்கத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்துக் கொண்டு சென்றால் 2040 ஆம் ஆண்டில் கடலில் கலக்கக்கூடிய பிளாஸ்டிக் அளவு 600 மில்லியன் டன்னாக பெருகும் என்றும், இது 30 லட்சம் நீலத் திமிங்கலங்களின் எடைக்கு சமம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க பிளாஸ்டிக் கழிவுகளை 80% வரை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

author avatar
Rebekal