கோவையில் கல்லூரி மாணவர்களின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி….!!!

கோவையில் பேரூரில் கல்லூரி மாணவர்களின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணி :

கோவை மாவட்டம், பேரூரில், பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுசூழல் குழுவினர் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், தலைமுறையை காப்போம் என்ற கோஷங்களுடன் இப்பேரணி நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.