கோவை அரசு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையம்.!

கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருத்தப்படும்.

மேலும், மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் இணைந்து திறந்து வைத்தனர். அதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.