மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் அமைக்க திட்டம் – நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்!

தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், ஓடைகளின் குறுக்கே பணைகள் அமைக்க திட்டம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் காவிரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கொள்கை குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்