பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணில்! அச்சத்தில் அமெரிக்க மக்கள்!

பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணில்! அச்சத்தில் அமெரிக்க மக்கள்!

பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலால் அமெரிக்க மக்கள் அச்சம்.

இந்த  ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, மனிதர்களின் உயிர்களை வாரிக்கொள்ளும் வகையில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது  உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி மனிதர்களுக்கும் இந்த நோய்  பரவும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

இந்த பிளேக் நோய் அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. ஏன்னென்றால், இந்த நோய் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிகளை காவு வாங்கியுள்ளது.

இந்த நோய்  தாக்கத்தால்,ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தை அழித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் அறிகுறி என்னவென்றால், திடீரென அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

தற்போது டென்வரின் தென்மேற்கே உள்ள மோரிசன் நகரில் பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலை கண்டறிந்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளேக் தொற்று நோய்க்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காவிட்டால், இது மக்கள் மத்தியில் பரவி மிகப்பெரிய ஆணவத்தை ஏற்படுத்தக் கூடும்.

 மேலும், இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அழைக்கப்படாவிட்டால், இந்த நோய் மனிதர்களை ஒரு  விடும் என  தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube