# 30 KG தங்கம் # முதல்வர் பதவி தப்புமா??!!

கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக கிளம்பி உள்ள சர்ச்சையால் முதல்வர்  பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடைப்பெற்று வருகிறது.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக கிளையின் அலுவலகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தல் நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அண்மையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய அதிரடி சோதனை வேட்டையில் 30 கிலோ தங்கம் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 15 கோடி.

இந்த தங்கம் ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஒருவருடைய  பெயருக்கு  பார்சல் வந்தது. அதிகாரிகள் இது குறித்து விசாரித்ததில், பார்சலுக்கும் அவருக்கும்,  சம்பந்தம் இல்லை என்று தெரியவந்தது.

Kerala Gold Smuggling: Pinarayi Vijayan forced to ditch trusted ...

மேலும் துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சர்ஜித், நிர்வாக செயலராக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோர் தான் இந்த கடத்தலின்  பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அயடுத்து சர்ஜித் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முளையாக செயல்பட்ட ஸ்வப்னா தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவாகியுள்ள ஸ்வப்னா கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றி சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் அங்கு புகார் தெரிவித்து வருகின்றன.

CM Pinarayi Vijayan Removes Sivasankar As His Secretary After ...

முதல்ரின் முதன்மை செயலாளர்? தகவல் தொழிட்நுட்ப பிரிவு அதிகாரி? பொய்யான ஆவணங்களை கொண்டு தங்கம் கடத்தல் அதுவும் தூதரக அதிகாரிகளை கொண்டு  என்று? எதிர்கட்சிகள் எதிர்த்து தள்ளவே இவ்விவகாரம் அங்கு விஷ்வரூபம் எடுத்ததுள்ளது.

இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார். ‘தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வர் அலுலவகத்துக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனால் இவ்விவகாரம்  குறித்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  காங்கிரஸ், பா.ஜக  உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தவே பிரச்சணை விஷ்வரூபம் எடுத்து கொண்டிருந்த போது மௌனமாக ஏன் இருக்கிறார் முதல்வர் என்று கேள்விகள் பினராயிவை குடைந்த நிலையில் வாய்திறந்த முதல்வர்  குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தங்க கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னாவை பற்றி எனக்கு தெரியாது. அரசு பணியில் அவர் சேர்ந்ததும் எனக்கு தெரியாது என்றார். இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணையை அதிரடியாக  துவக்கியுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: துாதரகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து  ஒரு போதும் தப்ப முடியாது. விவாகாரம் குறித்து விசாரணை துவக்கப்பட்டு உள்ளது.இதில் உண்மை விரைவில் வெளியில் வரும் என்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருக்க மத்திய புலனாய்வு பிரிவும் களமிரங்கி உள்ளது. அதுவும்  தங்க கடத்தல் குறித்த விசாரணையை துவக்கியுள்ளதால், பல அதிர்ச்சிகரமான உண்மைகள்  இதில் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் முதல்வர் பினராயி விஜயன் மீது, எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருவதால் கடும் நெருக்கடியானது அவரது பதவிக்கு ஏற்பட்டுள்ளது.

author avatar
kavitha