கொரோனாவுக்கான மாத்திரை விலை ரூ.75 ஆக குறையும் - கிளன்மார்க்!

ஃபெவிபிராவிர் எனும் பெயர் கொண்ட கொரோனாவை ஒழிக்கக் கூடிய மாத்திரை

By Rebekal | Published: Jul 13, 2020 04:52 PM

ஃபெவிபிராவிர் எனும் பெயர் கொண்ட கொரோனாவை ஒழிக்கக் கூடிய மாத்திரை விலை 99 ஆக இருப்பது 75 ஆக குறையும் என  க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமாக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தற்பொழுது ஜப்பானின் பிலிம் கோல்டு கார்ப்பரேஷனின் ஒரு பிரிவின் மூலம் தயாரிக்கப்பட்ட காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான ஃபெவிபிராவிர் தயாரிக்க மற்றும் விற்க க்ளென்மார்க் நிர்வாகம் கடந்த மாதம் ஒப்புதல் கொடுத்தது. இது ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு 80 % உதவுவதாகவும் தகவல் வெளியகியுள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்கான மலிவான மருந்து நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனும் நோக்கில் தற்போது இது வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருந்தின் விலை தற்போது 99 ரூபாயாக உள்ளது. இதன் விலை வரும் காலங்களில் 75 ஆக குறையும் என்று கிளன்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் கடந்த திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc