மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடலுடன் மிரட்டலாக காதலர் தினத்தை கொண்டாடிய பிகில் பட இயக்குனர்!

மாஸ்டர் திரைப்படத்துடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். விஜய் சேதுபதி சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், பிகில் பட இயக்குனரான அட்லி நேற்று தனது மனைவி பிரியா உடன் இணைந்து காதலர் தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதனை அடுத்து  பிரியா, அட்லீக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அதோடு விஜய்யின் ஒரு குட்டிக் கதைப் பாடலில் இடம்பெற்ற ‘லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, அல்வேஸ் பி ஹேப்பி, என்று வரிகளை பதிவிட்டு தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.