ரிலீஸ் தேதியுடன் டிரைலர் அப்டேட் கொடுத்த பிச்சைக்காரன் -2 படக்குழு.!!

‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன்-2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனையடுத்து, இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வழக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து இறுதியாக படம் வெளியாகும் தேதியை  படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கான டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.