தேவசேனாவாக மாறிய சிவாங்கி..! வைரலாகும் புகைப்படங்கள்.!

குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக சிவாங்கி பாகுபலி தேவசேனா கெட்டப் போட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.

இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார். இரண்டாவது சீசனில் கனியும் வெற்றிபெற்றனர். மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மீண்டும் உற்சாகம் அளிக்கும் வகையில், குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்த படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாங்கி நிகழ்ச்சிக்காக பாகுபலி தேவசேனா கெட்டப் போட்டுள்ளார். அதற்கான புகைப்படத்தையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படதிற்கு லைக்குகள் குவிந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.