குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..!

குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..!

2019 குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு & மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18 மற்றும் 20ஆம் தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2018-2019 மற்றும் 2019-2020 (Combined Civil Services Examination-IV (Group-IV Services)] இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.06.2019 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண்:19/2019 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது.

இத்தேர்வு தொடர்பான இரண்டாம்கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, தேர்வாணைய சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு 18.12.2021 மற்றும் 20.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண். இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இட ஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு உரிய நாட்களில் / நேரத்திற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube