பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு அங்கீகாரம் …!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 91% கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்டதாக உள்ள நிலையில் இந்த தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸாக போடப்படும் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தற்போது முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் பிற நாடுகளிலும் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Rebekal