31 C
Chennai
Wednesday, July 28, 2021

பெட்ரோல் & டீசல் விலை உயர்வு..!!


47
/ 100


  • சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.19-க்கு விற்பனை.
  • டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.42-க்கு  விற்பனை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்றயை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 25 காசுகள் உயா்ந்து ரூ.97.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல், ஒரு லிட்டா் டீசல் விலை 27 காசுகள் உயா்ந்து ரூ.91.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news

Related news