2013-ஐ ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைவாக தான் உள்ளது – எல்.முருகன்

2013-ஐ ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைவாக தான் உள்ளது – எல்.முருகன்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை  பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும்  பிரமாண்டமான பொது கோவையில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைவதாகவும், தற்போது அவர் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில்  தொடங்கும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை  பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது. அப்போது சிலிண்டர் விலை ரூ.1,000-க்கும் மேல் இருந்தது. தற்போது ரூ.700 தான் உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை  சர்வதேச விலை அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார மந்தநிலை உள்ளது. இந்தியாவிலும் விலையேற்றம், சர்வதேச விலையேற்றத்தை பொருத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube