பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை உயரும்!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையான மே 23-ம் தேதி மாலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும், ஆனால், மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது.” என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment