நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருப்பது போலவே ஒவ்வொருவரின் பண்பும் குணமும் வித்தியாசமானவையாக இருக்கும். அதனை பேசும் தன்மை, முக பாவனை போன்றவற்றை வைத்து கண்டுபிடிக்க முடியும். அதேபோல, உங்கள் தாடையை வைத்தும் கூட நீங்கள் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை கண்டுகொள்ளலாம்.
அதன்படி, உங்கள் தாடை வலுவானதாக இருந்தால் என்ன அர்த்தம் மற்றும் பலவீனமாக இருந்தால் என்ன அர்த்தம் அதை உங்களின் குணங்களை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம். இப்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இரண்டு விதமான தாடை அமைப்புகள் உள்ளது.
வலுவான தாடை:

உங்கள் முகம் கோடிக்கணக்கான ரகசியங்களை கொண்டுள்ளது. அதில் ரகசியமான ஒன்றுதான் தாடை. அதன்படி, உங்களிடம் வலுவான தாடை இருந்தால் நீங்கள் அதிக வலிமை, ஆற்றல் மற்றும் உறுதியை கொண்டவராக இருப்பீர்கள். அதோடு ஒரு விஷயத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பதோடு மட்டுமல்லாம் உங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு லட்சியத்தை கொண்டவராகவும் இருப்பீர்கள்.
இதையும் படிங்களேன்: Spot Error: 10 செகண்ட் தான் டைம்..! இந்த படத்தில் என்ன தப்பா இருக்குன்னு கண்டுபிடிங்க..!
நீங்கள் எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பீர்கள். உங்களுக்கான இலக்குகளை நீங்களே தேர்வு செய்து அதை அடைவதில் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க பயப்பட மாட்டீர்கள். சவால்களில் இருந்து மீண்டு வரக்கூடியவர்.
உறுதித்தன்மை, எதற்கும் பயப்படாத எண்ணம், நல்ல குணாதிசயங்கள், லட்சியவாதி போன்றவை உங்களது பண்புகளில் முக்கியமானவை ஆகும். மாடலிங், நடிப்பு, தொகுப்பாளர், வழக்கறிஞர், ஆசிரியர் போன்றவை உங்களது தொழில் முறையாக இருக்கலாம்.
பலவீனமான தாடை:

பலவீனமான தாடை உடையவராக நீங்கள் இருந்தால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவராக இருப்பீர்கள். அதாவது, நீங்கள் மிகவும் மென்மையானவர். உங்கள் மனம் குழந்தை போன்று இருக்கும். மற்றவர் மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்வீர்கள். பிறருக்கு ஆதரவாக நீங்கள் இருப்பதோடு, உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தையும் நீங்கள் உருவாக்குவீர்கள்.
உங்கள் தோற்றத்திலும் நீங்கள் அழகாக மற்றும் மென்மையாக இருப்பீர்கள். உங்களின் உணர்வுகளை மற்றவர்களிடம் எளிதில் கூறி விடுவீர்கள். உங்களிடம் படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்களேன்: IQ Test: இதுல எந்த கதவு EXIT ? 10 செகண்ட்ல கண்டுபிடிங்க பாப்போம்..!
ஒரு புதிய யோசனையை கொண்டு வந்து செயல்படுத்துவதில் திறமையானவராக இருப்பீர்கள். விவேகம், மென்மை படைப்பாற்றல் கற்பனை திறன் போன்றவை உங்களது முக்கிய பண்புகள் ஆகும் இந்த படைப்பாற்றால் நீங்கள் விஞ்ஞானி, கலை வல்லுநர், ஓவியக் கலைஞர், எழுத்தாளர் போன்ற தொழில்களில் ஈடுபடலாம்.