ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒருவித ஒளியியல் மாயை ஆனது நமது கண்களில் தந்திரமாக விளையாடி, இல்லாத ஒரு விஷயத்தை பார்க்க வைக்கிறது. அது ஒரு சிறிய படமாக இருந்தாலும் கூட, ஆப்டிகல் இல்யூசன் மூலம் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நீங்கள் அதனை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.
அது உங்கள் அறிவை கூர்மையை சோதிக்க உதவுவதோடு மூளையை இன்னும் தெளிவாக செயல்பட வைக்கும். அதோடு சில புகைப்படங்களில் நீங்கள் பார்க்கும் உருவங்களை வைத்துக் கூட உங்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தகைய ஒரு சோதனையை நாம் இப்போது செய்து நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படத்தில் நீர்வீழ்ச்சி இருப்பது போல உங்களுக்கு தெரியலாம். ஆனால் இதில் நன்றாக தேடினால் சில உருவங்கள் உங்களுக்கு தெரியும். இந்த உருவங்களில் நீங்கள் எதை முதலில் பார்க்கிறீர்கள் என்பதை வைத்து நீங்கள் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
நதி:
நீங்கள் முதலில் ஒரு நதியைப் பார்த்தால் நீங்கள் உள்நோக்க மனநிலையை கொண்டுள்ளீர்கள். அதாவது உங்களின் கூர்மையான அறிவால் உங்களது வாழ்க்கையில் புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொழுது அதற்கான தீர்வை கண்டுபிடித்து அதனை திறமையாக வழிநடத்துவீர்கள்.

பெண்:
நீங்கள் ஒரு பெண்ணை பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலும் அழகான விஷயங்களை கவனம் செலுத்தும் திறன்களை கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள் யார் என்ன கூறினாலும் அதனை புரிந்து கொண்டு செயல்படும் தன்னை உடையவராக இருப்பீர்கள். இந்த குணாதிசயங்கள் சிக்கலான வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்க உங்களுக்கு அடிக்கடி உதவுகின்றன. உங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்படுவீர்கள்.

ஓநாய்:
இந்த புகைப்படத்தில் நீங்கள் ஓநாயை முதலில் பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையில் உங்களுக்கு நிகழும் தடைகளை அச்சமின்றி எதிர்கொள்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. நீங்கள் சிறிய பிரச்சனைகளில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து அதனை பயன்படுத்தி கொள்ளும் திறமை வாய்ந்தவராக இருப்பீர்கள்.

கரடி:
நீங்கள் கரடியை முதலில் பார்த்தீர்கள் என்றால் அமைதியான மற்றும் வாழ்க்கையை நேர்மறையான எண்ணங்களுடன் அணுகக் கூடியவர். நீங்கள் தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் முன்னேறுவதற்கு முயற்சி செய்வீர்கள். நீங்கள் கடின உழைப்பு மற்றும் அதிக பக்தி கொண்டவராக இருப்பீர்கள்.

சிறுத்தை:
சிறுத்தையை முதலில் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு இலக்கை குறிவைத்து செல்லும்போது வேகமாகவும், திறமையாகவும் செயல்படுவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க தயாராக இருப்பீர்கள். இதனால் உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பீர்கள்.