தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் – வாட்ஸ் அப் விளக்கம்

தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் – வாட்ஸ் அப் விளக்கம்

தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாற்றம் வணிகரீதியான கணக்குகள் மட்டும் தான், தனி நபர் கணக்குகளை பாதிக்காது, தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வணிக நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்க பேஸ்புக்கு நிறுவன தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் மட்டுமே, கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்வதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை தொடர்ந்து பயனர்களின் முடிவாகவே இருக்கும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் தகவல்களை பரிமாறும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தை புதிய கொள்கை பாதிக்காது என்றும் தேவைப்படுவோர் மட்டும் வணிக கணக்குகளுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.

பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் அறிவித்திருந்தது. பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் தெரிவித்ததை அடுத்து வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ் அப்புக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube