#BREAKING: மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் நிரப்ப அனுமதி- உயர்நீதிமன்றம் ..!

மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒற்றை தொடர்ந்தனர். அதில்,  தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில்  தெரிவித்தனர்.

அனைத்து விதிகளையும் பின்பற்றபட்டதாகவும், உடற்த்தகுதி தேர்வு உள்ளிட்ட 70% பணிகள் முடிந்துள்ளதாகவும், புதியதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

author avatar
murugan