இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதி ரத்து..!

இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதி ரத்து..!

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிலர் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரட்டை மடி வலைகளால் மீன் வளம் குறையும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.  இதனை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள், இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளனர்.

Join our channel google news Youtube