ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!

கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர  உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

குமரி மாவட்டம் அருமனையில் மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜார்ஜ் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர் கடுமையாக விமர்சித்து பேசியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், பாரதியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் புகாரை அடுத்து வீடியோ ஆதாரத்தின் பெயரில் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதுரையில் கைது செய்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமினில் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். முதல் தகவல் அறிக்கையின் நகல் கிடைக்காததால் அதன் ஜெராக்ஸ் பிரதியை தாக்கல் செய்ய ஜார்ஜ் பொன்னையா அனுமதி கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர  உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

author avatar
murugan