இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
பெரியகோவிலில் இவ்விழாவானது ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கிய நிலையில் தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதன்பின் பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும் அதே நாள் மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்று வந்தன.பெரியகோவிலே மந்திர ஒலிகள் எங்கும் எதிரொலித்தன.இந்த பூஜைகளத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜையான ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி ஆகியவை நடைபெறும்
அதன் பின்னா் சரியாக காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி நடைபெற்று 7.25 மணிக்கு எல்லாம் திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கும்.இதைத்தொடா்ந்து கச்சிதமாக காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்று, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதே போல் மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும் இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளிகிறார்.குடமுழுக்கு பற்றி கேட்பதே புண்ணியம் என்றால் அதில் கலந்து கொள்வதும் அதனை காண்பதும் அதை விட புண்ணியம்.23 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு காண்கிறது தஞ்சை அதில் பங்குகொண்டு இறை தரிசனம் பெறுவது எத்தனை புண்ணியம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….எல்லாம் அவன் அருள் அவனை வணங்கி வளம் பெறுவோம்..
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…